கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

0 4886
கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், ம.பி., சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு

கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு வழிமுறைகள், மற்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்துமாறு, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும், கேரளாவில், சுமார் 5 ஆயிரத்திற்கும் குறைவின்றி, ஒருநாள் கொரோனா பாதிப்பு பதிவாகிறது.

இதையடுத்து, மாஸ்க் அணிவது, தனிநபர் இடைவெளி, சானிடைசர் பயன்பாடு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை, பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு, 5 மாநில அரசுகளை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை தீவிரப்படுத்துமாறும், 5 மாநிலங்களையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments