ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகளைத் திரும்பப் பெற அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதற்கான ஆணையைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பிப்ரவரி ஐந்தாம் நாள் சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரித் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தியோர் மீது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.
காவலர்களைத் தாக்கியது, தீ வைப்பு போன்ற ஒருசில வழக்குகளைத் தவிர மற்ற வழக்குகளை அரசு திரும்பப்பெறும் எனத் தெரிவித்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காவல்நிலையங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள 308 வழக்குகளின் விவரங்களைப் பட்டியலிட்டுள்ளது.
Comments