இந்தியாவில்ஆயிரக்கணக்கான மரபணு மாற்றங்களுடன் கொரோனா வைரஸ் - ஐதராபாத் செல்லுலார் ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு

இந்தியாவில் 7 ஆயிரத்து 569 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் ரகங்கள் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஐதராபாத்தில் உள்ள செல்லுலார் & மாலிகுலார் பயாலஜி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓராண்டிற்கு முன்னர் ஒரே ஒரே விதமான மரபுக்கூறுடன் ஊகானில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுதும் பரவியுள்ளது. இந்த பரவலின் போது கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான வடிவில் மரபணு மாற்றம் பெற்றுள்ளதாக இந்த மையம் ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடித்துள்ளது.
அதே நேரம் தற்போது பல நாடுகளில் அச்சத்தை விளைவித்துள்ள மரபணு மாற்ற வைரசுகளின் தாக்கம் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. மரபணு மாற்ற வைரசுகளில் N440K என்ற வைரஸ் சில தென்மாநிலங்களில் வேகமாக பரவுவதும் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Comments