வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கான கோரிக்கைக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு

0 960
வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கைக்கான கோரிக்கைக்கு உயர்நீதிமன்றம் மறுப்பு

ட்டமன்ற தேர்தலின்போது, வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டுக்கள் அனைத்தையும் எண்ண வேண்டுமென்ற கோரிக்கையை தற்போது பரிசீலிக்க இயலாது என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த மக்களவை தேர்தலில், ஒவ்வொரு தொகுதியிலும் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் மட்டுமே ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட்டதாகவும், அப்போது மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும், ஒப்புகைச் சீட்டுகளுக்கும் இடையே வித்தியாசங்கள் இருந்ததாக மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments