கோடியக்கரை : சேற்றில் சிக்கிய ஆலிவ்ரிட்லி... மள மளவென களமிறங்கிய வனத்துறை!

0 23217
மீட்கப்பட்ட ஆலிவ்ரெட்லி ஆமை

கோடியக்கரை கடற்கரையில் அரியவகை ஆலிவ்ரிட்லி ஆமை சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியது. 100 கிலோ எடை உடைய ஆமையை மீட்டு படகு மூலம் கடலில் வனத்துறையினர் விட்டனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை கடற்கரைக்கு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அரியவகை இனமான ஆலிவ்ரிட்லி ஆமைகள் முட்டையிட வருவது வழக்கம் . அதே போல, நடுக்கடலிலிருந்து சுமார் 50 வயது மதிக்கதக்க 100 கிலோ எடை கொண்ட ஆலிவ்ரிட்லி ஆமை கோடியக்கரை கடற்கரைக்கு முட்டையிட வந்தது.

கடற்கரையில் இருந்த சேற்றில் சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடியது. இதை பார்த்த மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக, சம்பவ இடத்துக்கு வந்த கோடியக்கரை வனத்துறையினர் ஆலிவ்ரிட்லி ஆமையை சேற்றில் இருந்து மீட்டு பிளாஸ்டிக் மிதவையில் வைத்து சிறிது தூரம் கடலில் கொண்டுபோய் விட்டனர்.

ஆனால், மீண்டும் அந்த ஆமை கடற்கரைக்கு வந்து விட்டது .உடனடியாக, வனத்துறையினர் ஆமையை கடலுக்குள் ஒரு கிலோ மீட்டர் தூரம் கடலில் கொண்டுபோய் விட்டனர் . தொடர்ந்து, ஆமை நீந்தி கடலுக்குள் சென்று விட்டது. ஆலிவ்ரிட்லி ஆமையை காப்பாற்றிய வனத்துறையினரை பொதுமக்கள், மீனவர்கள் பாராட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments