சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் தேதியை நீட்டித்தது திமுக

சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்ப மனு தாக்கல் தேதியை நீட்டித்தது திமுக
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 24 வரை கட்சித் தலைமையகத்தில் விண்ணப்பிக்கலாம் என முன்பு அறிவித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
கட்சி நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க விண்ணப்பம் அளிக்கும் காலக்கெடுவை பிப்ரவரி 28ஆம் நாள் மாலை 5 மணி வரை நீட்டித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Comments