மகளை வளர்க்க மறுமணம் செய்து கொள்ளாத தந்தை... சிறுமிக்கு கயவன் செய்த கொடுமையால் கதறல்!

மதுரையில் சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த கயவன் போச்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் வசித்து சரும் ஒருவருக்கு 17 வயது மகளும், 19 வயது மகனும் உள்ளனர். இவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்து போனார். ஆனாலும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அவர் விரும்பவில்லை. மனைவி இல்லாத நிலையில், தன் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கியுள்ளார். நேற்று சிறுமியின் தந்தையும் சகோதரரும் வேலைக்கு சென்றுவிட சிறுமி தன் தோழியுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(வயது36) என்பவன் இரு சிறுமிகளுக்கும் பக்கார்டி லெமன் மதுவில் கூல்டிரிங்ஸை கலந்து கூல் டிரிங்ஸ் என்று கூறி குடிக்க கொடுத்துள்ளான். பின்னர், செந்தில் குமார் மது போதையில் இருந்த இரு சிறுமிகளிடமும் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளார். தன் மகளுக்காக மறுமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்தவரின் மகளை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளான்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தந்தை சிறுமி உறங்கிக் கொண்டிருப்பதை கண்டு எழுப்பியுள்ளார். அப்போது, சிறுமியின் வாயிலிருந்து மது வாடை அடித்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை, சிறுமி தெளிந்ததும், ' என்ன ஏதுவென்று' விசாரித்துள்ளார். சிறுமி நடந்த விவரங்களை அழுதபடியே கூறியுள்ளார். இதனால், கடும் ஆத்திரமடைந்த தந்தை தன் நண்பர்களுடன் சென்று செந்தில்குமார் பிடித்து தர்ம அடி கொடுத்தார். பிறகு, மதுரை டவுன் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் செந்தில் குமாரை ஒப்படைத்தனர். தொடர்ந்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் செந்தில்குமார் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தன் குழந்தைகளை வளர்க்க மறுமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்த தந்தை தன் மகளின் நிலை குறித்து கதறியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Comments