சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சந்திப்பு

சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் சந்திப்பு
சென்னை போயர்ஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன் சென்னை சென்றதும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு ஆதரவு கேட்பேன் என கூறியிருந்தார்.
ஆனால் சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்த நிலையில் தான் கமல்ஹாசன் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.
Comments