ஹைதராபாத் அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞன் கைது

0 7893
ஹைதராபாத் அருகே காதலை ஏற்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞன் கைது

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், காதலை ஏற்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் மிரட்டிய இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

சாய் நகரைச் சேர்ந்த அபிஷேக் என்பவன், அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளான்.

தொடர்ந்து, தன்னுடையை காதலை ஏற்றுக் கொள்ளுமாறு தொலைபேசி மூலமாகவும், நேரிலும் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

நேற்று, மாலை கல்லூரி முடிந்து சகோதரருடன் வீடு திரும்பிய பெண்ணை,அவ்வழியாக பைக்கில் வந்து வழிமறித்த அபிஷேக் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளான்.

சுதாரித்துக் கொண்ட பெண்ணின் சகோதரரும், அப்பகுதி மக்களும் இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments