அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யத் தேடல் குழு அமைக்கும் பணி தொடக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்யத் தேடல் குழு அமைக்கும் பணி தொடக்கம்
அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் புதிய துணைவேந்தரை நியமிப்பதற்காகத் தேடல் குழு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரல் 11ஆம் நாள் நிறைவடைகிறது. இதனால் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காகத் தேடல் குழு அமைக்கப்படுகிறது.
இந்தக் குழு உறுப்பினர்களில் ஒருவரைப் பல்கலைக்கழகம் பரிந்துரைக்கும்.
முன்னாள் துணைவேந்தர் தியாகராஜனைத் தேடல் குழு உறுப்பினராக்குவது எனப் பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தேடல் குழுவின் மற்ற உறுப்பினர்களும் விரைவில் நியமிக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Comments