மதுரையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு : சில்லறை விற்பனையில் கிலோ ரூ.180-க்கு விற்பனை

மதுரையில் சின்ன வெங்காயம் விலை உயர்வு : சில்லறை விற்பனையில் கிலோ ரூ.180-க்கு விற்பனை
மதுரையில் சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் உள்பட, கேரளாவின் சில பகுதிகளுக்கும் வெங்காயம் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கடந்த மாதம் பெய்த மழை காரணமாக, வெங்காயம் விளைச்சல் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், சந்தைகக்கும் வரத்து குறைந்தது.
இதன் காரணமாக, மதுரையில் கடந்த வாரம் 100 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ சின்ன வெங்காயம், தற்போது மொத்த விலையில் 160 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பெரிய வெங்காயம் மொத்த விலையில் கிலோ 40 ரூபாய் முதல் 55 ரூபாய் வரையிலும், சில்லறை விலையில் கிலோ 60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Comments