நெல்லையில் பட்டப்பகலில் இளைஞருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு.... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
நெல்லையில் பட்டப்பகலில் இளைஞருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு.... பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
நெல்லையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரத்தில் மூன்று பேர் சேர்ந்து ஒருவரை அரிவாளால் வெட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
பாளையங்கோட்டை சேர்ந்த மகராஜன் என்பவருக்கும் அவரது நண்பர்கள் மணிகண்டன், அருண் உள்ளிட்ட மூன்று பேருக்கும், கடந்த மாதம் திருமண வீட்டில் வைத்து மது அருந்தியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை மகராஜனுக்கு போன் செய்து நெல்லை சந்திப்பு கைலாசபுரத்திற்கு வரவைத்த நண்பர்கள் 3 பேரும், அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர்.
மகாராஜன் லேசான காயத்துடன் அங்கிருந்து தப்பிய நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் கைதான மூவரும் கஞ்சா வியாபாரிகள் என்பதும் தெரியவந்துள்ளது.
Comments