இந்தியா-சீனா ராணுவங்களிடையே 10ஆம் சுற்று பேச்சுவார்த்தை

0 725
இந்தியா-சீனா ராணுவங்களிடையே 10ஆம் சுற்று பேச்சுவார்த்தை

இந்தியா-சீனா ராணுவங்களிடையே 10ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டின் சீனப் பகுதியில் Moldo என்ற இடத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில், இரு நாட்டு ராணுவங்களின் படைப்பிரிவு தளபதிகள் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே எட்டப்பட்ட உடன்பாட்டின்படி, பாங்காங்சோ ஏரி கரைகளில் படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கை முடிவடைந்துவிட்டது.

இதை இருதரப்பும் உறுதிசெய்வதோடு, மோதல்போக்கு நிலவும் பிற பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து பேசி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தெப்சாங் சமவெளி, டெம்சோக், கோக்ரா-ஹாட்ஸ்பிரிங் ஆகிய பகுதிகளில் படைகளை விலக்கிக் கொள்வது குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments