மே.வ பாஜக இளைஞர் அணி செயலாளர் போதை மருந்துடன் பிடிபட்டார்?

0 3136
மே.வ பாஜக இளைஞர் அணி செயலாளர் போதை மருந்துடன் பிடிபட்டார்?

கோகைன் போதை மருந்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அணியின் பொதுச் செயலாளரான பமேலா கோஸ்வாமி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தாவின் நியூ அலிபூர் பகுதியில் அவர் தனது தோழியுடன் வந்த காரை மறித்து போலீசார் சோதனை போட்டனர். அப்போது சில லட்சங்கள் மதிப்புள்ள போதைப் பொருளை தமது பர்சில் அவர் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள மாநில பாஜக நிர்வாகிகள், இது திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். 2019ல் பாஜகவில் சேருவதற்கு முன்னர் பமேலா கோஸ்வாமி விமானப் பணிப்பெண்ணாகவும், டிவி சீரியல் நடிகையாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments