ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை 3 மாத இடைவெளியில் போட்டுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வில் தகவல்

0 1595

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசியை 3 மாத இடைவெளியில் இரண்டு முறை போட்டுக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

இந்த தடுப்பூசி இப்போது 6 வார இடைவெளியுடன் இரண்டு முறை போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஆண்ட்ரூ பொல்லார்டு ஆய்வு ஒன்றை நடத்தினார். அதில், ஆக்ஸ்போர்டு தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டதும்  3 மாதங்களுக்கு அது 76 சதவிகத பாதுகாப்பை அளிப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக பிரபல மருத்துவ ஆய்வு இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.

3 மாத இடைவெளிக்குப் பின்னர் இரண்டாவது டோசை போட்டால் போதும் எனவும், இதனால் பல நாடுகளில் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியை விரைவாக போட்டு முடிக்க முடியும் எனவும் தி லான்செட் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments