கொரோனா விதி மீறல்: அபராதம் கட்ட பணமில்லாத இளம்பெண்... முத்தம் கேட்ட காவல் அதிகாரி

0 89716
கொரோனா விதி மீறல்: அபராதம் கட்ட பணமில்லாத இளம்பெண்... முத்தம் கேட்ட காவல் அதிகாரி

தென் அமெரிக்க நாடான பெருவில் கொரோனா அபராதம் விதிக்காமல் இருக்க பெண்ணிடம் முத்தம் வாங்கிய காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கொரோனா பாதிப்பு காரணமாக அந்நாட்டு தலைநகர் லிமாவில் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி இளம்பெண் ஒருவர் காரில் சென்றுள்ளார். இதனைக் கண்ட காவலர் ஒருவர் அவருக்கு அபராதம் விதிக்க முயன்றார்.

ஆனால் அந்தப் பெண்ணிடம் பணம் இல்லாததால் முத்தம் ஒன்றைக் கேட்டு வாங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதால் அந்த காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments