அசாமில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்: தீபங்களை ஏற்றி மக்கள் நன்றி!

அசாமில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர்: தீபங்களை ஏற்றி அசாம் மக்கள் நன்றி!
அஸ்ஸாம் மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் மண் விளக்குகளை ஏற்றி வைத்தனர்.
துப்ரி, மேகாலயாவின் புல்பரி இடையே பிரம்மபுத்திரா நதியில் 5,000 கோடி ரூபாயில் புதிய பாலம் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 19 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த பாலம் இந்தியாவின் மிக நீளமான பாலமாக அமையும். மேலும் அசாமின் காளிபாரி, ஜோர்கட் இடையிலான பாலத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இவை தவிர பல்வேறு சிறிய பாலங்கள், சாலைத் திட்டங்கள், சுற்றுலா படகு குழாம்களையும் பிரதமர் காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்தார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பிரம்மபுத்ரா நதியில் அமைந்துள்ள தீவு நகரமான மஜூளி என்ற பகுதியில் உள்ள மக்கள்தீபங்களை ஏற்றி வைத்தனர்.
Comments