மம்தா பானர்ஜி அரசு மீது மேற்கு வங்க மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு

மம்தா பானர்ஜி அரசு மீது மேற்கு வங்க மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக அமைச்சர் அமித்ஷா குற்றச்சாட்டு
மேற்கு வங்கத்தில் மம்தா அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகக் கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அங்கு பாரதிய ஜனதா 200 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய அவர், மம்தா பானர்ஜி வங்காளத்தில் மாற்றத்தைக் கொண்டு வரத் தவறிவிட்டதாகக் குறிப்பிட்டார். மோடியின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும், நாட்டின் மனநிலை மாறிவிட்டது, வங்காளத்தின் மனநிலையும் மாறும் என்றும் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பான கேள்விக்கு, நாட்டின் அனைத்துப் பகுதியிலும் சிஏஏ அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டார்.
Comments