பாலியல் மருத்துவரால் முரட்டு சிங்கிளுக்கு பாய்சன்..! கர்ப்பிணி மனைவி ஆத்திரம்

0 21370
பாலியல் மருத்துவரால் முரட்டு சிங்கிளுக்கு பாய்சன்..! கர்ப்பிணி மனைவி ஆத்திரம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கணவனுக்கு விஷம் வைத்து கொலை செய்ததாக கர்ப்பிணி மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். பாலியல் மருத்துவரின் பேச்சை கேட்டு மனைவியிடம் அடங்க மறுத்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் சாலை தோட்டப்பகுதியில் வசித்து வந்தவர் நந்தகுமார். இவருக்கு வீட்டோடு சேர்ந்தார் போல் மூன்று ஏக்கர் விவசாய நிலம் இருந்தாலும் அருகில் உள்ள மாவு மில்லுக்கும் வேலைக்கு சென்று வந்தார். 35 வயது வரை திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் தவித்து வந்த நந்தகுமார் 7 மாதங்களுக்கு முன்பு மைதிலி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில் வயிற்றுவலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நந்தகுமார், தான் சாப்பிட்ட உணவு கசந்ததாகவும் , தான் வயலுக்கு அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்து வாடை வீசியதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல நந்தகுமார் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் உயிரிழந்தது உறுதியானது.

நந்தகுமாருக்கு பாய்சன் வைத்தது யார் என்ற கோணத்தில் போலீசார் நடத்திய விசாரணையில், அவரது கர்ப்பிணி மனைவி மைதிலி தான் இந்த படுபாதகச் செயலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலைக்கான பின்னணியும் அம்பலமானது.

35 வயதான நந்தகுமாருக்கு, ஏற்கனவே 15 வயதில் திருமணம் முடிந்து கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த 20 வயது மைதிலி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்த நிலையில், ஆரம்பத்தில் நந்தகுமார் மனைவியுடன் தாம்பத்தியத்தில் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.

நண்பரின் ஆலோசனைப்படி பாலியல் மருத்துவர் ஒருவரை சந்தித்த நந்தகுமார், அவர் அளித்த மாத்திரைகளை வாங்கி சாப்பிட்ட பின் மைதிலி கர்ப்பமானதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், இரவுபகலாகத் தனக்குத் தொல்லை கொடுத்த கணவனின் செய்கையால் நொந்து போயுள்ளார் மைதிலி.

கணவனை ஒரேடியாகத் தீர்த்துக்கட்ட முடிவு செய்த மைதிலி, வயலுக்கு வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை உணவில் கலந்து நந்தகுமாருக்கு கொடுத்துள்ளார். ஒரு வேளை அதிலும் உயிர் தப்பிவிட்டால் என்ன செய்வது ? எனக்கருதி, மதிய உணவுக்காக கொடுத்தனுப்பிய டிபன் பாக்ஸிலும் விஷம் கலந்து கொடுத்துள்ளார் மைதிலி.

இரு வேளையும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் நந்தகுமார் பரிதாபமாக பலியானதாக தெரியவந்தது. இதையடுத்து கர்ப்பிணி மனைவி மைதிலியை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட மைதிலி நந்தகுமாரை திருமணம் செய்து கொள்ளும் முன்பு உள்ளூர் இளைஞர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததால் உடனடியாக திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்த நேரத்தில், முரட்டு சிங்கிளாக இருந்த நந்தகுமாருக்கு மைதிலியை திருமணம் செய்து கொடுத்ததாக கூறப்படுகின்றது. எனவே மைதிலி தனது ரகசிய காதலனுக்காக கணவனுக்கு உணவில் விஷம் வைத்திருப்பார் என்று நந்தகுமாரின் உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதே நேரத்தில் மனைவியின் கர்ப்பகாலத்தில் பாலியல் மருத்துவரின் வீரியமான பேச்சைக்கேட்டு, அத்துமீறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சாட்சியாக மாறி இருக்கின்றது இந்த கொலை சம்பவம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments