கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இந்தியா - சீனா ராணுவம் இடையே நிகழ்ந்த மோதல் காட்சிகளை வெளியிட்ட சீன ஊடகம்

0 9611
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா - சீனா ராணுவம் மோதிக்கொண்டது தொடர்பான வீடியோ காட்சிகளை சீன ஊடகம் வெளியிட்டுள்ளது.

கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியா - சீனா ராணுவம் மோதிக்கொண்டது தொடர்பான வீடியோ காட்சிகளை சீன ஊடகம் வெளியிட்டுள்ளது.

நீர்நிலை ஒன்றின் அருகே இருதரப்பை சேர்ந்த ஏராளமன வீரர்கள் திரண்டு இருப்பதும், சீன வீரர்களை இந்திய வீரர்கள் துணிச்சலுடன் எதிர்கொண்டு அத்துமீறி உள்ளே வர விடாமல் தடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

கடந்த ஆண்டு நிகழ்ந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்த நிலையில், சீன வீரர்கள் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறித்து அந்த நாட்டின் ராணுவம் வாய்திறக்காமல் இருந்தது.

இந்த நிலையில் 4 வீரர்கள் பலியானதாக சீனா அறிவித்திருக்கும் நிலையில் இந்த வீடியோ வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments