விவாகரத்து கோரிய பெண்... காரை ஏற்றிக் கொன்ற கொடூரன்... வீண் சந்தேகத்தால் கொலையாளியான டாக்டர்.!

0 52236
வீண் சந்தேகத்தால், விவாகரத்து கோரிய மனைவியை, கத்தியால் சரமாரியாக குத்தியதோடு, காரை ஏற்றிக் கொன்ற, கொடூர மனம் படைத்த மருத்துவரை, போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

வீண் சந்தேகத்தால், விவாகரத்து கோரிய மனைவியை, கத்தியால் சரமாரியாக குத்தியதோடு, காரை ஏற்றிக் கொன்ற, கொடூர மனம் படைத்த மருத்துவரை, போலீசார் கைது செய்திருக்கின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஆனந்த் நகர் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து, டாக்டர் கோகுல் குமார், கீர்த்தனா தம்பதியர் வசித்து வந்தனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில், கீர்த்தனாவை கத்தியால் குத்தி படுகாயமடையச் செய்த கோகுல் குமார், காரை ஏற்றி படுகொலை செய்ததாக கூறப்படுகின்றது. அக்கம்பக்கத்தினர், துரத்தியதால், கீர்த்தனாவை ஏற்றிக் கொன்ற, மாருதி பிரீசா காரில், கோகுல் குமார் தப்பிச் சென்றிருக்கிறான்.

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 40 வயதான டாக்டர் கோகுல்குமார், தன்னை விட 7 வயது இளைய பெண்ணான, மதுராந்தகம் கருங்குழி பகுதியைச் சேர்ந்த கீர்த்தனாவை, 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்திருக்கிறான். எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவரான கோகுல் குமாருக்கு, குழந்தை இல்லை.

இந்தச் சூழலில், கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக மருத்துவப் பணிக்குச் செல்லாமல், வீட்டிலேயே வெட்டியாக இருந்துள்ளான். அதேநேரம், மேல்மருத்துவர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ஹெச்.ஆர் பிரிவில் பணியாற்றி வந்த கீர்த்தனா மீது, தொடர்ந்து சந்தேகம் பிடித்திருக்கிறான். இதனால், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், மனமுடைந்த கீர்த்தனா, கடந்த 6 மாதங்களுக்கு முன், நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார்.

இந்தநிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில், காரில் வந்த கோகுல் குமார், சமாதானம் பேசுவதாக கூறி கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறான். கீர்த்தனாவுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோகுல்குமார், கத்தியை எடுத்து, கீர்த்தனாவை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகின்றது. இதை தடுக்க வந்த கீர்த்தனாவின் தந்தையையும், தாயாரையும் கத்தியால் தாக்கியிருக்கிறான்.

அப்போதும், ஆத்திரம் குறையாத கோகுல் குமார், கீர்த்தனாவின் தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்துவந்து தெருவில் போட்டு, காரை ஏற்றி படுகொலை செய்ததாக சொல்லப்படுகிறது.

நிகழ்விடத்திற்கு வந்த மதுராந்தகம் டிஎஸ்பி கவீனா, போலீசாரை உஷார்ப்படுத்திய நிலையில், அச்சிறுப்பாக்கம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே கார் கவிழ்ந்த விபத்துக்குள்ளான நிலையில், கோகுல் குமாரை கைது செய்தனர்.

டாக்டர் கோகுல் குமார் போன்ற மனநோயாளிகளுக்கு, உச்சப்பட்ச தண்டனை வழங்கப்படும்போது தான், இதுபோன்ற, சமூகத்திற்கு கேடானவர்கள், எதிர்காலங்களில் உருவாவது தடுக்கப்படும்.!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments