தமிழகம் வளர்ச்சி அடைய மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழ்நாடு வளர்ச்சி அடைய, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வளர்ச்சி அடைய, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல்வேறு உதவிகளை செய்து வருவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை - தியாகராயநகரில் தொழில் துறையினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார்.
வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலம் பறிபோய்விடும் என பொய் பிரசாரம் மேற்கொள்ளப்படுவதாக கூறிய அவர், தேசிய மின்னணு விவசாய விற்பனை முறை தமிழ்நாட்டிலும் படிப்படியாக அமலுக்கு வரும் என்றார்.
Comments