சவுதி அரேபியாவின் மலை பிராந்தியத்தில் கொட்டித் தீர்க்கிறது பனி

அமெரிக்காவைப் போலவே சவுதி அரேபியாவின் சில இடங்களிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. அந்நாட்டின் வடமேற்கில் உள்ள தார் மலைபகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைப் போலவே சவுதி அரேபியாவின் சில இடங்களிலும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. அந்நாட்டின் வடமேற்கில் உள்ள தார் மலைபகுதியில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் வெயிலின் ஆதிக்கம் உள்ளநிலையில் தார் மலை பிராந்தியதில் கொட்டித்தீர்க்கும் பனி, சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தார் மலை பிராந்தியத்தில் கொட்டும் பனியால் கொல்லும் குளிர் நிலவுவதால் மக்கள் வீடுகளில் இருக்குமாறு அந்நாட்டு வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.
மக்கள் வீடுகளில் இருக்க வெட்டவெளியை தங்கும் இடமாக கொண்ட ஒட்டகங்கள் பனியில் நனையும் நிலை உருவாகி உள்ளது.
Comments