கேரளாவில் பாஜக ஆட்சி அமைந்தால் முதலமைச்சராக தயார்- மெட்ரோ மேன் ஸ்ரீதரன்

ஆளுநர் பதவி மீது விருப்பம் இல்லை என்றும், கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முதலமைச்சர் பதவி வகிக்க தயார் என்றும், மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பதவி மீது விருப்பம் இல்லை என்றும், கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், முதலமைச்சர் பதவி வகிக்க தயார் என்றும், மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் பிறந்த ஸ்ரீதரன், டெல்லி, கொச்சி மெட்ரோ திட்டங்களின் தலைவராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
தற்போது 88 வயதாகும் நிலையில், பாஜகவில் இணைய உள்ளார். தமது அரசியல் பிரவேசம் குறித்து பேசிய மெட்ரோ மேன் ஸ்ரீதரன், கேரளாவில், பாஜகவை நோக்கி, ஏராளமானோர் சாரை, சாரையாக படையெடுப்பதாகக் குறிப்பிட்டார்.
ஆளுநர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதால், அதில், தமக்கு ஒருபோதும் விருப்பமில்லை என்றும், ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
Comments