அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நிதி திரட்ட மதுரையில் ரத யாத்திரைக்கு அனுமதி

0 1440
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிதியை திரட்ட மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க மதுரை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான நிதியை திரட்ட மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க மதுரை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு  அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. உதவி காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற்று நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவதாக காவல் ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி மதுரையில் ரத யாத்திரையை தொடங்க இன்றைக்குள் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments