எரிந்த தேருக்குப் பதில் ஒரு கோடி ரூபாயில் புதிய தேரைக் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார் முதலமைச்சர் ஜெகன்மோகன்

ஆந்திரத்தின் அந்தர்வேதி நரசிம்மர் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகச் செய்யப்பட்ட தேரை முதலமைச்சர் ஜெகன்மோகன் ஒப்படைத்தார்.
ஆந்திரத்தின் அந்தர்வேதி நரசிம்மர் கோவிலுக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிதாகச் செய்யப்பட்ட தேரை முதலமைச்சர் ஜெகன்மோகன் ஒப்படைத்தார்.
கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் அந்தர்வேதி என்னும் ஊரில் உள்ள நரசிம்மர் கோவில் தேர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் எரிந்துபோன தேருக்குப் பதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் 40 அடி உயரமுள்ள புதிய தேர் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேரைக் கோவில் நிர்வாகத்திடம் முதலமைச்சர் ஜெகன்மோகன் ஒப்படைத்தார்.
Comments