காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் போலீசார் இருவர் உயிரிழப்பு

0 1318

காஷ்மீரில் பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் போலீசார் இருவர் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர் மாவட்டத்தில் பர்சுலாவில் உள்ள கடை வீதியில் போலீஸ்காரர்கள் முகமது யூசுப்பும், சோகைல் அகமதுவும் கடைக்காரர்களிடம் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த பயங்கரவாதி ஒருவன், போலீஸ்காரர்களின் பின்னால் இருந்து துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டான். இதில் போலீஸ்காரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் கடை வீதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்த தாக்குதல் சம்பவத்திற்கு லஷ்கரே தொய்பா அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments