மறு சுழற்சி, மறு பயன்பாடு வாழ்வின் ஒரு பகுதியாக மாற வேண்டும் - பிரதமர் மோடி

கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உறவு முக்கிய பங்கு வகிக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள மாணவர்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களை ஒன்றிணைக்கும் நோக்கில் ‘இந்தியா-ஆஸ்திரேலியா மறுசுழற்சி பொருளாதாரம் போட்டி’ நடைபெற்றது.
போட்டியின் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி இந்த போட்டியின் வாயிலாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து புதுமையான தீர்வுகள் கிடைத்துள்ளன என்றார்.
மறுசுழற்சி பொருளாதாரம் பல பிரச்சனைகளை தீர்ப்பதில் ஒரு முக்கிய படியாக இருக்கும் என்ற அவர், மறுசுழற்சி, மறுபயன்பாடு, கழிவுகளை அகற்றுவது மற்றும் வளங்களின் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவை நம் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற வேண்டும் என்றார்.
கொரோனா தொற்றுக்கான இந்தியாவின் தீர்வுகள் ஒட்டுமொத்த உலகிற்கே உந்துசக்தியாக திகழ்வதாக அவர் தெரிவித்தார்.
Comments