'ஒப்புக் கொள்ளாததால் கொலை செய்தேன்' - 80 வயது மூதாட்டியை கொன்றவன் பரபரப்பு வாக்குமூலம்!

0 46231

பாலியல் வன்கொடுமையின் போது தப்பிக்க முயன்ற 80 வயது மூதாட்டியை கல்லால் அடித்து கொன்றவனை சிசிடிவி ஆதாரங்களை கொண்டு போலீசார் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி தலையில் அடிப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். தகவலறிந்து மூதாட்டியை மீட்ட போலீசார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழந்தார். மூதாட்டியின் முகத்தில் கல்லால் அடித்து கொல்லப்பட்ட காயமும், பிறப்புறுப்பில் ரத்தப்போக்கும் இருந்ததால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் இறந்தவர் திருவெற்றியூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது . அதையடுத்து உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியை போலீசார் தேடி வந்தனர். அதுமட்டுமின்றி எல்லையம்மன் கோவில் முதல் எண்ணூர் வரையில் உள்ள 40 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு நபர் மூதாட்டியுடன் பேசியது மட்டுமின்றி அவரை அழைத்து சென்றது தெரிய வந்தது.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சந்தேகத்திற்கு இடமான அந்த நபர் திருவொற்றியூரை சேர்ந்த ஜெயக்குமார் என்பதையும், அவன் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தாழங்குப்பத்தில் வசித்தது வந்ததையும் அறிந்தனர். பின்னர் ஜெயக்குமாரை அழைத்து சென்ற போலீசார் விசாரித்தனர். அதில், மது அருந்தி விட்டு சென்ற போது வழியில் மூதாட்டியை பார்த்ததும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறி மறைவான இடத்திற்கு சென்று உடலுறவுக்கு முயன்றதாகவும், அப்பொழுது மூதாட்டி தப்பிக்க முயற்சிக்கவே ஆத்திரத்தில் அவரது தலைலையில் கல்லைக் போட்டு கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான்.

மது போதை தலைக்கேறியதில் மூதாட்டியை கொலை செய்ததாக கூறிய ஜெயக்குமாரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments