அரசு ஊழியர்கள் மின்சார வாகனம் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் - அமைச்சர் நிதின் கட்கரி

0 3094

ரசு ஊழியர்கள் அனைவரும் மின்சார வாகனம் மட்டுமே பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என மத்திய சாலைபோக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

கோ எலக்ட்ரிக் என்ற மின்சார வாகன பயன்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்,  எரிசக்தி துறை அமைச்சகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த அத்துறையின் அமைச்சர் ஆர்கே சிங்கை வலியுறுத்தியதோடு, தாமும் தனது துறையில் இதை அமல்படுத்த உள்ளதாக கூறினார்.

மேலும், எல்பிஜி சிலிண்டர்களுக்கு மானியம் வழங்குவதற்கு பதிலாக, மின்சார சமையல் சாதனங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments