காஷ்மீர் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காவலர்கள் இருவர் காயம்

0 609

காஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் காவலர்கள் இருவர் காயமடைந்தனர். அப்பகுதியைச் சுற்றி வளைத்த பாதுகாப்புப் படையினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீநகரில், பகத் என்னுமிடத்தில், காவல்துறையினர் மீது, தீவிரவாதிகள் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டனர். இதில் காயமடைந்த காவலர் இருவரை மற்ற காவலர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் அறிந்ததும் அப்பகுதியைப் பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். பதுங்கி இருக்கும் தீவிரவாதிகளைப் பிடிக்கத் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments