நெல்லை திமுக இளைஞரணி அமைப்பாளர் வெட்டி படுகொலை : கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள், திமுகவினர் போராட்டம்

0 1090
நெல்லை திமுக இளைஞரணி அமைப்பாளர் வெட்டி படுகொலை : கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள், திமுகவினர் போராட்டம்

நெல்லையில் திமுக இளைஞரணி அமைப்பாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்த செல்லதுரை நேற்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், கொலையாளிகளை கைது செய்யக்கூறி, உறவினர்களும், திமுகவினரும் முக்கூடல் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொலை குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதோடு, அசம்பாவிதங்களை தவிர்க்க முக்கூடல் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments