உலகம் முழுவதும் பயங்கரத்தை பரப்புபவர்களில் பலர் படித்தவர்களாக இருக்கின்றனர்: பிரதமர் மோடி வேதனை

0 1925
உலகம் முழுவதும் பயங்கரத்தை பரப்புபவர்களில் பலர் படித்தவர்களாக இருக்கின்றனர்: பிரதமர் மோடி வேதனை

உலகம் முழுவதும் பயங்கரத்தை பரப்புபவர்களில் பலர் படித்தவர்களாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் சாந்திநிகேதனில் அமைந்துள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் அவர் உரையாற்றினார். உலகில் பயங்கரத்தை பரப்புபவர்களில் பலர் படித்தவர்களாகவும், திறமைவாய்ந்தவர்களாகவும் இருப்பதாகவும், அதேசமயம் கொரோனா போன்ற பேரிடர்களில் இருந்து மக்களைக் காக்க மருத்துவமனைகளிலும் ஆய்வகங்களிலும் உயிரைப் பணயம் வைப்பவர்களும் இருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இது சித்தாந்தம் தொடர்பானது அல்ல, மனப்பாங்கு தொடர்பானது எனக் குறிப்பிட்ட மோடி, மனப்பாங்கு நேர்மறையானதா எதிர்மறையானதா என்பதைப் பொறுத்தே செயல்கள் அமையும் என்றார். பிரச்சனைக்குரியவர்களாக இருப்பதா, தீர்வு காண்பவர்களாக இருப்பதா என்பது நமது கைகளிலேயே உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments