தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக் குறிப்பில், கடலோர மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியசை ஒட்டியும் பதிவாகும்.
Comments