திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - மு.க.ஸ்டாலின் உறுதி

0 4680
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி.யை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - மு.க.ஸ்டாலின் உறுதி

திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான ஜி.எஸ்.டி.வரியை குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தும் என அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். 

கோவை கொடீசியா மைதானத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பொதுமக்களிடம் பேசி குறைகளை கேட்டறிந்த ஸ்டாலின், அதனை மனுவாகவும் பெற்றுக் கொண்டார். அண்ணா, கலைஞர் மீது ஆணையாக கூட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஸ்டாலின் உறுதியளித்தார்.

பின்னர் பேசிய அவர், எஸ்.ஐ.ஹெச். எஸ் காலணி ரயில்வே மேம்பாலம் தான் துணை முதலமைச்சராக இருந்த போது துவங்கப்பட்டதாக குறிப்பிட்ட மு.க.ஸ்டாலின், பல்வேறு பிரச்சனைகளால் தற்போது வரை பாலம் கட்டுமான பணிகள் நிறைவடையவில்லை என சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் பாலம் கட்டிமுடிக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை மாநகரில் ஜி.எஸ்.டி. வரியால், சிறு, குறு தொழில் முனைவோர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் சிறுகுறு தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு தனியாக கொள்கைகள் வகுத்து, அவர்களுக்கான ஜி.எஸ்.டி வரியை 5சதவீதமாக குறைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் என்றும் ஸ்டாலின் உறுதி பூண்டார்.

சமையல் எரிவாயு விலை உயர்வு காரணமாக, பலர் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய மு.க.ஸ்டாலின், அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் எனக்கூறிவிட்டு, சமையல் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளதாக சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments