காரைக்கால் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் - துரிதமாக மீட்ட இந்திய கடலோர காவல் படையினர்

0 1258
காரைக்கால் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் - துரிதமாக மீட்ட இந்திய கடலோர காவல் படையினர்

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த 5 மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த மீனவர்களின் படகில் பிரதான எஞ்சின் பழுதாகி, காரைக்காலிலிருந்து கிழக்கே 205 நாட்டிக்கல் தொலைவில் படகுக்குள் தண்ணீர் புகத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து தங்களிடமிருந்த டேட் கருவி மூலமாக கடலோர காவல்படை மையத்திற்கு மீனவர்கள் தகவல் கொடுக்கவே, ரோந்துக் கப்பலில் மீனவர்களின் படகு இணைக்கப்பட்டு பத்திரமாக கரை வந்து சேர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments