சச்சின் மகன் என்பதற்காக அர்ஜுன் டெண்டுல்கரை நாங்கள் ஏலத்தில் எடுக்கவில்லை - மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளர்

0 28346

ச்சினின் மகன் என்பதால் அர்ஜுன் டெண்டுல்கரை ஏலத்தில் எடுக்கவில்லை என மும்பை இந்தியன்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார். 

அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை அணி நிர்வாகத்தால் அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். கடந்த 2008 முதல் 2013 ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய சச்சினுக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக அவரது மகன் ஏலம் எடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில் அர்ஜூன் டெண்டுல்கரை திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்ததாகவும், அர்ஜூன் நிறைய நுணுக்கங்களை கற்றுக்கொள்ள இந்த வாய்ப்பு உதவும் என்றும் பயிற்சியாளர் மகேலா ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments