சட்டமன்ற தேர்தலில் காங். சார்பில் போட்டியிட வருகிற 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்

0 809
சட்டமன்ற தேர்தலில் காங். சார்பில் போட்டியிட வருகிற 25-ம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம்

வருகிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு பிப்ரவரி 25-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட விரும்புவோர், காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் வருகிற 25-ம் தேதி முதல் மார்ச் 5-ம் தேதி வரை விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மனுக்களை பூர்த்தி செய்து வழங்கும் போது, பொதுத் தொகுதிக்கு 5ஆயிரம் ரூபாயும், தனித்தொகுதி மற்றும் மகளிர் 2ஆயிரத்து 500 ரூபாயும் செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments