சினிமா பாணியில் கிணறு காணாமல் போனது போல்...இப்போது ரோடு காணவில்லையாம்... நெல்லை மக்கள் புகார்

0 936

சினிமா பாணியில், கிணறை காணவில்லை என்பது போல், நெல்லை முக்கூடல் அருகே சாலையை காணவில்லை என, பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.

பாப்பாக்குடி கிராமம், காந்திநகர் பகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில், அப்பகுதி மக்கள் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவலை பெற்றனர். அதில், மூன்று தெருவுக்கு மெட்டல் சாலை அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைக்கப்பட்ட மெட்டல் சாலைகள் தற்போது காணவில்லை எனவும், சாலை அமைக்கப்பட்டதாக பண மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் அளித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments