திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி திருவிழா கொண்டாட்டம்

0 8606
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமி திருவிழா கொண்டாட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு ஹனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா, கோவிந்தா என்று முழங்க, அதிகாலை முதல் வாகனமாக சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சகிதமாக மலையப்பசுவாமி எழுந்தருளினார்.

அடுத்தடுத்து சின்ன சேஷ வாகனம், தங்க கருட வாகனம் ஆகியவற்றில் எழுந்தருளிய மலையப்பசுவாமி, நான்காவதாக ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளினார்.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 50 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், அதனையும் தாண்டி மாட வீதிகளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். இருப்பினும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி கோயில் இடது புறம் உள்ள தெப்பக்குளத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments