நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

0 9790
நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிப்பு

பழம்பெரும் நடிகைககள் சரோஜா தேவி, சௌகார் ஜானகி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்சினிமாவில் மகத்தான பங்களிப்பு செய்த கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், கலைமாமணி விருது அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், நடிகர்கள் சிவகார்த்திகேயன், யோகிபாபு, ராமராஜன், பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சௌகார் ஜானகி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, இசையமைப்பாளர்கள் இமான், தினா, இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா, தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கலைப்புலி தாணு ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பாடலாசிரியர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள், நடன இயக்குநர்கள் என மொத்தம் 42 பேருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments