தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மட்டுமே விசாரிக்கும் - உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு

தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மட்டுமே விசாரிக்கும் - உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவிப்பு
தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மட்டுமே விசாரிக்கும் என உயர்நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், புதுச்சேரி தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்கள், அவற்றின் இடைத்தேர்தல்கள் ஆகியவை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகள் அனைத்தும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மட்டுமே விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளார்.
Comments