ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

0 1005
ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஷோப்பியான் மாவட்டத்தில் படிகாம் (Badigam) பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது, துப்பாக்கிச் சண்டை மூண்டது.

இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக, போலீஸ் ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்துள்ளார். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் 3 பேரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் வசமிருந்த ஆயுதங்கள், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. முன்னதாக துப்பாக்கிச் சண்டையின்போது சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் வீரமரணமடைந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments