உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் மர்மமாக உயிரிழப்பு: மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என டிஜிபி தகவல்

0 544
உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் மர்மமாக உயிரிழப்பு: மரணத்திற்கான காரணம் தெரியவில்லை என டிஜிபி தகவல்

உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்த நிகழ்வில் அவர்களின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை என அம்மாநில டிஜிபி ஹெச். சி. அஸ்வதி தெரிவித்துள்ளார்.

உன்னாவ் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனம் எடுக்கச் சென்ற 3 தலித் சிறுமிகள் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை மருத்துவனையில் சோதித்த போது, இருவர் இறந்திருந்ததும் ஒருவர் உயிருக்குப் போராடுவதும் தெரிந்தது. சிறுமிகளின் கைகள் கட்டப்பட்டிருந்ததாகவும், விஷம் கொடுக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த, உத்தரப்பிரதேச டிஜிபி, சிறுமிகளின் இறப்புக்கான காரணம் தெரியவில்லை என்று கூறினார். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments