தெலுங்கானாவில் வழக்கறிஞர் தம்பதி வெட்டிக் கொலை: மூன்று பேர் கைது

தெலுங்கானாவில் வழக்கறிஞர் தம்பதி வெட்டிக் கொலை: மூன்று பேர் கைது
தெலுங்கானாவில் ராமகுண்டம் அருகே வழக்கறிஞர்களாக உள்ள கணவன்-மனைவியை வெட்டிக் கொன்ற கொலையாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்து அவர்கள் பயன்படுத்திய விலை உயர்ந்த காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
குன்டா சீனிவாஸ், சிரஞ்சீவி, மற்றும் குமார் ஆகிய மூவரும் அந்த தம்பதியரின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். கிராமத்தில் கோவில் கட்டுவது தொடர்பாக குன்டா சீனிவாசுக்கும் வழக்கறிஞர் வாமன் ராவ்-நாகமணி ஆகியோருக்கும் முன்விரோதம் இருந்துவந்துள்ளது.
வழக்கறிஞர்களை வழிமறித்து இந்த கும்பல் வெட்டிக் கொலை செய்து தப்பியோடியது. காரில் அவர்கள் செல்வதை செல்போன் உரையாடல் மூலம் ஒட்டுக் கேட்ட காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர்
Comments