மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு... இரண்டு மாவட்டங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்

0 2593
மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பாதிப்பு... இரண்டு மாவட்டங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் மீண்டும் பொதுமுடக்கத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 4 ஆயிரத்து 787 பேருக்கு புதிதாக பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இது கடந்த இருமாதங்களில் அதிகபட்ச எண்ணிக்கையாகும். இதனைத் தொடர்ந்து அமராவதி மற்றும் யவத்மால் மாவட்ட நிர்வாகங்கள் இரவு நேர பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளன. 

தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பொதுமுடக்கத்தை கடுமையாக்க இருப்பதாகவும், மக்கள் சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments