இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக இணைந்து ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய உள்ளதாக தகவல்

இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக இணைந்து ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்ய உள்ளதாக தகவல்
ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக்கை இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக இணைந்து உற்பத்தி செய்ய உள்ளதாக வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
தற்போது மூன்றாம் கட்ட இறுதிப் பரிசோதனையில் உள்ள ஸ்புட்னிக் வி மருந்து அனைத்துப் பரிசோதனைகளையும் அடுத்த மாதம் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாஸ்கோவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்ற வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வரதன் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் Sergey Lavrovவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனையடுத்து ஸ்புட்னிக்கை இந்தியாவுடன் இணைந்து பெரும் அளவுக்கு உற்பத்தி செய்ய ரஷ்யா ஆர்வம் கொண்டிருப்பதாக ஹர்ஷ் வரதன் தெரிவித்துள்ளார்.
Comments