உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பாலியல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டாரா ?

0 622
உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் பாலியல் வழக்கில் சிக்க வைக்கப்பட்டாரா ?

ச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு அவரை சிக்க வைப்பதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என்று விசாரணைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அவரை விரும்பாதவர்கள் இதன் பின்னணியில் இருக்கலாம் என்றும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ரஞ்சன் கோகய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.

இதனை விசாரிக்க நீதிபதி பட்நாயக் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணைக்குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு சீல் வைத்த கவரில் அறிக்கையை கடந்த செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

சீல் வைக்கப்பட்ட உறையில் இருந்து அறிக்கை நேற்று முதன்முறையாகப் பிரிக்கப்பட்டு அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments