ரூ.20 கோடியில் பிரம்மாண்ட சந்தைகள்..!

விவசாயிகள் பயிரிடும் காய்கறிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக 10 மாவட்ட தலைநகரங்களில் 20 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட சந்தைகள் கட்டப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சியை கலைக்க திமுக எத்தனையோ சதி முயற்சிகளை மேற்கொண்டதாகவும், அவை தவிடு பொடியானதாகவும் கூறினார்.
முதலமைச்சராக நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று ஐந்தாம் ஆண்டில் தாம் அடியெடுத்து வைத்திருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, இரவு பகல் பாராமல் இரத்தத்தை பூமியில் சிந்தி உழைப்பவன் விவசாயி என்று குறிப்பிட்டார்.
20 கோடி ரூபாய் செலவில் 10 மாவட்ட தலைநகரங்களில் விவசாயிகளின் நலனுக்காக பிரம்மாண்ட சந்தைகள் அமைக்கப்படும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி அது போன்று ஒரு பெரிய சந்தையை நெல்லையிலும் கட்ட அரசு பரிசீலிக்கும் என்றார்.
Comments