கோவிலில் பிச்சை மாமூல் வசூலிக்கும் சீனியர் பிச்சைக்காரி..! சங்கம் வைத்து வசூல்

0 46665
கோவிலில் பிச்சை மாமூல் வசூலிக்கும் சீனியர் பிச்சைக்காரி..! சங்கம் வைத்து வசூல்

சினிமாவில் வரும் காமெடி காட்சி போல கோவிலில் பிச்சை எடுப்பதற்கு முதியோர்களுக்கு இடம் ஒதுக்க மாதம் 1000 ரூபாய் மாமூல் வாங்குவதாக சீனியர் பிச்சைகார பெண் மீது உதவி கேட்போர் அளித்துள்ள புகார் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா ஒன்றில் பிச்சைக்காரர்கள் தங்களுக்குள் சங்கம் வைத்துக் கொண்டு யார் ? எங்கு பிச்சை எடுக்க வேண்டும் ? என்று எல்லை நிர்ணயம் செய்து கொள்ளும் காமெடி மிக பிரபலம்.

இதே போல புதுக்கேட்டையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சாந்தநாத சுவாமிகள் அருள்மிகு வேதநாயகி அம்பாள் சன்னதி கோவில் முன்பு எந்த இடத்தில் அமர்ந்து பிச்சை எடுக்க வேண்டும் என்று அனுமதி வழங்க சீனியர் பிச்சைக்கார பெண் ஒருவர் பிச்சைக்காரர்களிடம் மாமூல் வசூலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

10 ரூபாய் நோட்டை பவிசாக எண்ணி வசூல் வேட்டையை கணக்கிடும் இந்த பெண்மணி தான் பிச்சைக்காரர்களிடமே மாமூல் வசூலிக்கும் குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள பிச்சைக்கார சங்க தலைவி..!

இந்த கோவிலுக்கு வெளியே பிச்சை எடுத்து வந்த முதியவரை விரட்டியதோடு, பிச்சை எடுக்க வேண்டுமானால் மாத மாமூல் 1000 ரூபாய் தரவேண்டும் என கூறியதாக வேதனை தெரிவிக்கின்றார் சம்பந்தப்பட்ட முதியவர்

ஏற்கனவே இந்த கோவிலில் பிச்சை எடுத்து வரும் ஒரு மூதாட்டி, இந்த பெண்ணிடம் தனக்கும் தனது கணவருக்கும் ஆளுக்கு 1000 ரூபாய் வீதம் மொத்தம் 2000 ரூபாய் கொடுத்து பிச்சை எடுக்க இரு இடங்களில் அனுமதி வாங்கி வைத்திருப்பதாக வேதனை தெரிவித்தார்

மூதாட்டியின் புகார் தொடர்பான வீடியோ காட்சி உள்ளூர் காவல் நிலையத்திற்கு சென்ற நிலையில் பிச்சைக்கார சங்க தலைவிக்கு புத்திச்சொல்லி வழக்கம் போல வழக்கு பதிவு ஏதும் செய்யாமல் போலீசார் அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

இந்த மாமூல் வசூல் வீடியோ உயர் காவல் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்ல அவர்கள் கோவிலில் பிச்சை எடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து கோவில் பிச்சைக்காரர்களுக்கு தலைவியாக வலம் வந்த அந்த பெண் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகின்றது.

பிச்சைக்கார சங்க தலைவி நாள் ஒன்றுக்கு 1600 ரூபாய் வரை வசூல் மற்றும் பிச்சை மூலம் வருமானம் ஈட்டுவதாகவும், 10 ரூபாய்க்கு குறையாமல் பிச்சை பெறுவதை பாலிசியாக வைத்துள்ள அந்த பெண் மொத்த பணத்தையும் அருகில் உள்ள கடைகளில் கொடுத்து 500 ரூபாய் நோட்டாக மாற்றிச்செல்வார் என்றும் கூறப்படுகின்றது

பக்தர்களுக்கு இடையூறாக கோவிலில் சுற்றிதிரியும் பிச்சைக்கரர்களை பிடித்துச்சென்று மறுவாழ்வு மையத்தில் சேர்க்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments